Adirai Chat Corner

Saturday, January 31, 2009

பாலையான வாழ்க்கை

பாலையான வாழ்க்கையைப்

பசுஞ்சோலையாய் ஆக்கவே

பாலைவன நாட்டுக்கே

பறந்து வந்த பறவைகள் நாங்கள்...



இச்சையை மறந்தோம்;

இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;

பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;

பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...



இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;

இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;

"
பொருளிலார்க்கு இவ்வுலகில்லை"

பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;



"
இல்லானை இல்லாலும் வேண்டாள்;

ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன்

சொல் செல்லாமல் போய்விடும்" என்றாள்

ஔவ்வையார் அன்றே......



மூதாட்டியின் மூதுரைக்கும்

முழுமையான விரிவுரை நாங்களே...

பாதாளம் வரை பாயும் பணமே

பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே



-"kavianban"KALAM, Adirmapattinam

00971-50-8351499




Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பாலையான வாழ்க்கை"

Post a Comment